தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் அஜித்.
சூப்பர்ஸ்டாரின் பேட்ட படத்துடன் மோதினாலும் விஸ்வாசம் படம் மூலம் சூப்பர்ஹிட் வெற்றியை பெற்றுள்ளார்.
இப்படம் முழுவதும் வேட்டி சட்டை அணிந்துதான் நடித்திருப்பார். இதனால் இவரை பிரபல வேட்டி நிறுவனம் தங்கள் ப்ராண்ட் விளம்பரத்தில் நடிக்க அணுகியுள்ளது.
ஒருநாள் கால்ஷீட்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் கொடுக்க முன்வந்தும் நடிக்க மறுத்துவிட்டாராம்.
ஆரம்ப காலகட்டங்களில் நடித்த அஜித் தனக்கென ரசிகர் வட்டம் வந்தபிறகு எவ்வளவு பணம் தர முன்வந்தும் விளம்பரங்கள் நடிப்பதையே நிறுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.