ஷாருக்கான் பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார். அவருக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்பது அனைவரும் தெரிந்ததே. அவருக்கு என்னவோ தெரியவில்லை.
அண்மைகாலமாக அமையும் படங்கள் எல்லாம் தோல்வி படங்களாக அமைந்து வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் வெளியான Zero படமும் சேர்ந்துள்ளது.
இந்த படம் எதிர்பார்த்ததில் பாதியை தான் வசூலித்தாக சொல்லப்படுகிறது. மேலும் விமர்சனங்கள் எதுவும் பாராட்டும் படியாக அமையவில்லை. இது அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே.
படம் வந்து இரண்டு நாட்களாகிவிட்ட நிலையில் இப்படம் இந்தியாவில் ரூ 38.36 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாம்,
- வெள்ளி – ரூ 20.14 கோடி
- சனி – ரூ 18.22 கோடி