‘பேங் பேங்’ திரைப்பட இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹொலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகிவரும் ‘வார்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இதில் டைகர் ஷெராஃப், வாணி கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
ஹொலிவுட்டுக்கு நிகராக ஆக்ஷன் சண்டை காட்சிகளுடன் உருவாகியிருக்கும் இந்த படம் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் வெளியாகவுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் ஆக்ஷன் படம் என்பதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படத்தியுள்ளது.
இத்திரைப்படத்திற்காக பல நாடுகளில் இருந்து ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒக்டோபர் 2 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.