நடிகை ஸ்ருதிஹாசன் பறை இசையை அடிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்ருதிஹாசன் ஒரு பன்முக நபர். பாடுவது, நடிப்பது, நடனம் ஆடுவது என அனைத்திலும் தனது தந்தை கமல்ஹாசனை போல் சிறந்து விளங்குகிறார்.
இந்நிலையில் அவர் சமீப காலமாக பறை இசை வாசிப்பை கற்றுக்கொண்டு வந்தார். அதை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ காட்சி வைரலாவதை தொடர்ந்து இணையத்தில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.