சமீபகாலமாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பெரிய சர்ச்சை ஏற்படுத்தி வருபவர் ஸ்ரீரெட்டி. பல பிரபலங்கள் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி தன்னுடன் ஹோட்டலில் தனியாக இருந்ததாக கூறி அவர்கள் பட்டியலாளையும் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவளிக்கும் விதத்தில் நடிகை ஆண்ட்ரியா பேசியுள்ளார். “ஸ்ரீரெட்டி சொல்வது உண்மை என்றால், இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்க வலிமையான இதயம் வேண்டும். நான் இதுபோன்று எதுவும் சந்தித்ததில்லை. இவர் சந்தித்ததாக வெளிப்படையாக கூறுவது சரிதான். இதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும்” என ஆண்ட்ரியா கூறியுள்ளார்.