விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து, பாலிவுட்டில் ஹிட் கொடுத்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார் அஜித். இப்படம் அடுத்த வாரம் ரிலீசாக இருக்கிறது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான போனிகபூர் தயாரித்துள்ள இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து தல 60 படத்தையும் போனிகபூரே தயாரிக்க, வினோத்தே இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் இறுதியில் ஆரம்பமாக இருக்கிறது.
சமீபகாலமாக தனது படங்களில் வயதான தோற்றத்தில் நடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் அஜித். அந்த வரிசையில் தல 60 படத்திலும் அவர் வயதான தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தில் அவருக்கு மகள் கதாபாத்திரம் இருக்கிறதாம். அதில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்க இருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழில் முன்னணி நடிகையாக இருந்து தான் பாலிவுட்டிற்கு சென்று அங்கும் பிரபலமானார் ஸ்ரீதேவி. தன்னைப் போலவே தனது மகளையும் தமிழில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது தான் அவரது ஆசையாக இருந்தது. அதிலும் குறிப்பாக அஜித் படத்தில் அறிமுகப்படுத்த அவர் விரும்பினார்.
ஆனால், அதற்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, ஜான்வி முதலில் இந்தியில் அறிமுகமாகி விட்டார். இதற்கிடையே கடந்தாண்டு துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி எதிர்பாராதவிதமாக குளியல் அறை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். மகளின் முதல் பட ரிலீசைப் பார்க்காமலேயே அவர் மறைந்து விட்டார்.