ஷங்கர் தமிழ் சினிமா தாண்டி இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஷங்கர் அடுத்து இந்தியன் 2 படத்தை இயக்குவதாக இருந்து, பின் ஒரு சில பிரச்சனைகளால் அந்த படம் நிறுத்தப்பட்டது, அதனால், விஜய் படத்தை இயக்கவுள்ளார் ஷங்கர் என கூறினர்.
தற்போது ஷங்கர் மீண்டும் இந்தியன் 2விலேயே கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாராம், கமல் இல்லாத காட்சிகளை எல்லாம் முதலில் எடுக்க முடிவு செய்துவிட்டாராம்.
இந்த முறையாவது இந்த படம் சொன்னது போல் நடக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.