நடிகை சினேகாவின் சிறுவயது ஒளிப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
முப்பையில் பிறந்து, தமிழகத்தின் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வசித்து வந்த சினேகா, தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என தனக்கான முத்திரையை பதித்தவர்.
2000ஆம் ஆண்டுமுதல் சினிமாவில் நடித்து வரும் இவர் என்னவளே, ஆனந்தம்,கன்னத்தில் முத்தமிட்டால், பார்த்தாலே பரவசம், பம்மல் கே.சம்பவந்தம், புன்னகை தேசம், ஏ நீ ரொம்ப அழகா இருக்க, ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துக்கொண்ட இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.