அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகிவரும் ‘கோமாளி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படம் வரும் 15ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
நடிகை காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே இருவரும் கதாநாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
வெல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஹிப்ஹொப் தமிழா இசையமைத்துள்ளார்.