நடிகர் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது முறையாக இணைந்திருக்கும் ‘அசுரன்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது.
பொல்லாதவன், மயக்கம் என்ன, ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து தனுஷின் அசுரன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
‘கத்தரி பூவழகி’ பாடல், ‘பொல்லாத பூமி’ ஆகிய பாடல்கள் வெளியாகியுள்ளது. ‘பொல்லாத பூமி’ பாடலை தனுஷ், பு.ஏ.பிரகாஷ் குமார், கென் கருணாஸ் டி.ஜே ஆகியோர் பாடியுள்ளனர். ‘கத்திரிப்பூ அழகி’ பாடலை வேல்முருகன் மற்றும் ராஜலட்சுமி இணைந்து பாடியுள்ளனர்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் ஒக்டோபர் 4ம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். ‘கொடி’ படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் அப்பா, மகன் என்று இரண்டு தோற்றங்களில் நடித்து வருகின்றார்.
தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.