வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது, பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தமிழில் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படத்தை பொட்டு படத்தை இயக்கியுள்ள வடிவுடையான் இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் பொன்சே.ஸ்டீபன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.