அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு அவரின் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து விட்டார்கள். ஒரு வருடமாக தலயை திரையில் பார்க்காத ஏக்கத்தை இப்படம் மூலம் தீர்த்துக் கொண்டனர்.
படம் பார்த்தவர்கள் அனைவருக்கும் கண்ணீர் வரவழைத்துவிட்டார் இயக்குனர் சிவா. இதுவே அவரின் கடின உழைப்பிற்கான வெற்றி என்று கூட கூறலாம். சமீப நாட்களாக படத்தின் தமிழ்நாட்டு வசூல் ரூ. 125 கோடி என்ற பேச்சு தான் அதிகம்.
இதே விஷயத்தை ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் சிவாவிடம் கேட்டபோது, ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் டெக்னீஷியம் வியாபாரத்தின் விபரத்திற்குள் போய்விட்டால் அவருடைய கிரியேட்டிவிட்டி பாதிக்கப்படும்.
அதேபோல் ரசிகர்களும் வியாபாரத்தின் விபரத்திற்குள் போய்விட்டால் அவர்களுடைய ரசிப்புத்தன்மை பாதிக்கப்படும். அந்த இடத்திற்கு போகக்கூடாது என்பதே எனது எண்ணம் என கூறியுள்ளார்.