விஸ்வாசம் படம் அஜித்தின் நடிப்பில் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் பயங்கர வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தயாரித்த சத்ய ஜோதி டி.தியாகராஜன் சமீபத்தில் படத்தை பார்த்துவிட்டு வெளியில் இருந்த பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், இந்த படத்தை எடிட்டிங்கில் பார்க்கும்போதே கண்டிப்பாக பிளாக்பஸ்டராக வரும் என்ற நம்பிக்கை இருந்தது. ரீரெக்கார்டிங் எல்லாம் முடித்து படத்தை பார்த்தப்போது, குறிப்பாக எனக்கு ஒரு கிழக்கு வாசல், மூன்றாம் பிறை, இதயம் படங்கள் லெவலுக்கு ஒரு பேசக்கூடிய படமாக இருக்கும் என தோன்றியது, அது மாதிரியே அமைந்துவிட்டது.
அஜித் சாரிடம் இன்று காலை போன் செய்து, எனக்கு எல்லா ரிப்போர்ட்டும் நல்லாபடியா வருது, உங்க ரசிகர்களும் உங்க பெர்பாமன்ஸை ரொம்ப விரும்புகிறார்கள் என சொன்னேன். அதற்கு அவர் ஒரே வார்த்தையாக its all in the a hands of God என்று சொன்னார் என்றார்.