அஜித்தின் விஸ்வாசம் படம் இந்த வருடத்தின் டாப் ஹிட் படம். இப்படம் பெற்ற அளவிற்கு எந்த ஒரு படமும் இவ்வருடம் பெறவில்லை என்பது தான் உண்மை.
படத்தை விநியோகம் செய்த சிலரே படம் தங்களுக்கு லாபத்தை கொடுத்துள்ளது என்று சந்தோஷமாக கூறியிருந்தனர். இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தர் ஒருவர் அஜித்தின் ரசிகர்களுக்காக பொய் வசூல் விவரம் கூறப்பட்டது என ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
அந்த தகவல் பரபரப்பாக பேசப்பட்ட விஸ்வாசம் படத்தை விநியோகம் செய்த KJR ஸ்டூடியோஸ் இப்படம் படு வெற்றி என ஒரு பதிவு போட தல ரசிகர்கள் அந்த தகவலை வைரலாக்கி வருகின்றனர்.
பொங்கலுக்கு திரையிடப்பட்டு தீபாவளி வரை நாம் இதை பேசிக்கொண்டு இருக்கின்றோம். எனினும் எத்தனை தீபாவளி வந்தாலும், விஸ்வாசம் திரைப்படத்தின் சாதனையை மறந்துவிடவோ மறைத்துவிடவோ முடியாது. Happy Diwali folks! #Viswasam #ViswasamTruthPrevails
— KJR Studios (@kjr_studios) September 8, 2019