விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பிரமாண்ட வரவேற்பு பெற்றுள்ள படம். இப்படத்தை பார்க்க பேமிலி ஆடியன்ஸ் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் விஸ்வாசம் தமிழகத்தில் ஏற்கனவே ரூ 70 கோடி வரை வசூல் செய்ய, நாம் முன்பே கூறியது போல் எப்படியும் இன்னும் சில தினங்களில் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்துவிடும்.
அதே நேரத்தில் இப்படத்தில் திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் வாங்கிய விநியோகஸ்தர் ஒருவர் கூறுகையில் ‘கண்டிப்பாக இது அஜித் திரைப்பயணத்தில் பெஸ்ட் வசூலாக இருக்கும்.
மேலும், எப்படியும் ரூ 60 கோடி வரை இப்படத்திற்கு ஷேர் கிடைக்கும், தற்போது வரும் கூட்டத்தை பார்த்தால் ரூ 70 முதல் 80 கோடி கிடைத்தால் கூட ஆச்சரியமில்லை’ என்று தெரிவித்துள்ளார்.