அல்டிமேட் ஸ்டார் அஜித் குமாருடன் 4-வது முறையாக கூட்டணி அமைத்திருக்கும் இயக்குநர் சிறுத்தை சிவா விஸ்வாசம் படத்தை இயக்கி முடித்துள்ளார். தற்போது எடிட்டிங் பணி நடந்துவருகிறது. அஜித் “தூக்குதுரை” என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா “நிரஞ்சனா” என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.
பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் படத்தின் பாடல்களை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, குடும்ப ரசிகர்களிடம் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லரை எதிர்நோக்கி அஜித் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் விஸ்வாசம் படத்துக்கு தணிக்கைக்குழு ’யு’ சான்றிதழ் கொடுத்துள்ளது. படக்குழு இதை அதிகார்ப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இதனால் குடும்பத்துடன் பார்க்கும் கொண்டாட்டம் நிறைந்த படமாக விஸ்வாசம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆகையால் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இது போன்ற தகவல்கள் வேண்டும் என்று நினைத்தால் எங்களை பின்பற்றுங்கள்.