இவ்வருட பொங்கல் ஸ்பெஷல் விஸ்வாசம், பேட்ட என இந்த இரு படங்கள் தான். இரு தரப்பு ரசிகர்களும் மிகுந்த உற்சாகமாக இருக்கின்றார்கள். இரு படங்களுமே குடும்பத்துடன் ரசிகர்களை வரவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில் அண்மையில் வந்த இரு படங்களின் டிரைலர்களும் ஒன்றை ஒன்று மோதிக்கொள்ளும் படியாக வசனங்கள் இருந்தன. அதே வேளையில் விஸ்வாசம் டிரைலர் பேட்ட படத்தின் சாதனைகளை முந்தியது.
மேலும் பேட்ட படத்தை விட விஸ்வாசம் படத்திற்கு பலர் முன்னுரிமை கொடுப்பது போல இருப்பதால் இப்படத்திற்கு அதிகப்படியான காட்சிகள், அதிகாலை காட்சிகள் இருக்கும் என தெரிகிறது.
இந்நிலையில் ரஜினி தன் குடும்பத்துடன் பேட்ட படத்தின் முதல் நாள் காட்சியை காண வருவதாகவும் அதனால் அனைத்து தியேட்டர்களும் பேட்ட படத்தை தான் முதல் காட்சியாக போட வேண்டும் என கூறியுள்ளதாக தகவல்கள் சுற்றி வருகின்றது.
ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
ரஜினி 4 மணி ஷோவுக்கு குடும்பத்தோட ரோகிணி வர்றாராம். அதனால எல்லா 4 மணி ஷோவும் பேட்ட’யே போடணும்னு மன்றம் & சன் பிக்சர்ஸ் பிரஷர். நல்லா பண்றீங்கய்யா.