நடிகர் ஆர்யாவிற்கு மார்ச்சில் திருமணம் நடைபெறவுள்ளது. பிரபல நடிகை சயிஷாவை அவர் திருமணம் செய்யவுள்ளார்.
இந்நிலையில் ஆர்யா தற்போது திருமண பத்திரிகை எடுத்துக்கொண்டு பிரபலங்கள் பலரையும் சந்தித்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தது வருகிறார்.
இன்று நடிகர் விஷாலை அவர் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளார். அது பற்றி போட்டோ பதிவு செய்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் நடிகர் விஷால்.
“என் இதயத்திற்கு நெருக்கமான தருணம். ஆர்யாவின் திருமண அழைப்பிதழை கையில் வைத்துள்ளேன் என நம்பவே முடியவில்லை” என தெரிவித்துள்ளார் விஷால்.