நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்து வருகிறார். அண்மைகாலமாக அவருக்கு தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அவர் சொன்னதை நிறைவேற்றவில்லை, தன்னிச்சையாக செயல்படுகிறார், கியூப் பிரச்சனை என பல காரணங்களை காட்டி அவர் மீது புகார் எழுந்து வருகிறது.
மேலும் அவர் சங்க பணத்தை முறைகேடு செய்துள்ளதாகவும், அதற்காக தான் இளையராஜாவுக்கான விழாவை நடத்துவதாகவும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் சிலர் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டி போட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். சாவியை அருகே இருந்த காவல் துறையில் ஒப்படைத்து விட்டார்களாம்.
இந்நிலையில் விஷால் கூறுகையில் அவர்களுக்கு இளையராஜாவுக்கு எடுக்கும் விழாவை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே எண்ணம்.
முறைகேடு எதுவும் நடைபெறவில்லை. கணக்குகள் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும், விழா திட்டமிட்டபடி நடக்கும் என கூறியுள்ளார்.