நடிகர் விஷால் தற்போது தனது 41வது வயதில் ஆந்திராவை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இது பற்றி கடந்த சில நாட்களாகவே வதந்திகள் பரவியதை அடுத்து இன்று அவரே இதை வெளிப்படையாக கூறியுள்ளார்.
இவரது இந்த அறிவிப்பிற்கு பல நடிகர், நடிகைகளும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் இதனை கலாய்ப்பது போல் ட்விட் ஒன்றை நடிகர் விஷ்ணு விஷால் பதிவிட்டுள்ளார்.
இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இதுபோல் பதிவிட்டிருக்கும் அவர், அந்த ட்விட்டில், ஒரு ஆடு ரெடியாகிவிட்டது… அடுத்து ஆர்யா தான்… என்ன விக்ராந்த் நான் சொல்றது சரிதானே? என்று நடிகர்கள் ஆர்யா, விக்ராந்தையும் கிண்டலடித்துள்ளார்.
First ? ready airuchu…nxt ? @arya_offl ? yenna @vikranth_offl correct dhaane? https://t.co/ItgNOTjEKr
— VISHNUU VISHAL – VV (@vishnuuvishal) January 16, 2019