அஜித்தின் நடிப்பில் கடந்த 2017ல் வெளியாகியிருந்த படம் விவேகம். சிறுத்தை சிவா இயக்கியிருந்த இப்படத்தில் வில்லனாக விவேக் ஓபராய் நடித்திருந்தார்.
இந்தி சினிமா உலகில் மிகப்பெரிய நடிகரான இவருக்கு அங்கு பட வாய்ப்புகள் குறைந்ததனால் தான் தமிழ் பக்கம் வந்தார். ஆனால் விவேகம் படமும் மிகப்பெரிய தோல்வியை தழுவியதால் மீண்டும் இந்திக்கே சென்றுவிட்டார்.
பிறகு அவரை எப்படியோ பேசி சமாளித்து தெலுங்கில் நேற்று வெளியான ராம்சரணின் VVR என அழைக்கப்படும் வினய விதேய ராமா படத்தில் நடிக்க வைத்தனர். ஆனால் இந்த படமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய தோல்வியை தழுவியுள்ளது.