தமிழ் சினிமாவின் தல அஜித்தின் நடிப்பில் சமீபத்தில் விஸ்வாசம் படம் வெளிவந்தது. இந்த படத்தில் அவர் முழுக்க முழுக்க கிராமத்து நபராக நடித்திருந்தார்.
இதனால் இந்த படத்தில் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை எந்தவொரு காட்சிக்கும் மேக்கப்பே அஜித் போடவில்லையாம். இதனை விஸ்வாசம் படத்தின் காஸ்டியும் டிசைனரான அனுவர்தன் கூறியுள்ளார்.
மேலும் கூறிய அவர், இந்த படத்தில் அஜித் சாருக்கு மேக்கப் போட்டதை பார்த்ததே இல்லை. வெறும் ஸ்ப்ரே மட்டும் தான். முகத்திற்கு அதை அடித்து கொண்டு ஒரு துண்டால் துடைத்து கொண்டு நடிக்க ஆரம்பித்துவிடுவார்.
மேலும் உங்களுக்கு விவேகத்தில் கொடுத்த கஷ்டத்தை இந்த படத்தில் தரமாட்டேன் என அஜித் என்னிடம் கூறுவார்என்றார்