நடிகை அமலாபால், இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டவர். ஆனால் திருமணம் ஆன சில வருடங்களிலேயே இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு தலை தூக்கியதால் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
ஏ.எல்.விஜய்க்கு சமீபத்தில் இரண்டாவது திருமணம் ஆன நிலையில் அனைவரது கவனமும் அமலாபால் மீது விழுந்தது. அவர் என்ன கூற போகிறாரோ என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் தனது முன்னாள் கணவர் இனிமையானவர் என்று அவரது இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்து கூறினார். மேலும் அதே பேட்டியில் தானும் வேறொருவருடன் உறவில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இவரது ஆடை படத்திற்காக அளித்த பேட்டியில், நான் என் பார்ட்னரை கேட்ட பிறகு தான் எல்லா முடிவுகளையும் எடுப்பேன்.”ஆடை” பட கதையை கேட்ட போது அவரிடம் ஆலோசித்தேன். அவர் இது ஒரு அருமையான வாய்ப்பு. முதலில் உன்னை தயார் செய்துகொள், உடலாலும் மனதாலும் முழுமையாய் தயாராகி இதைச் செய் என்று சொன்னார். அவரால் தான் இப்படத்தை ஒத்துக்கொண்டேன் என தெரிவித்துள்ளார். இதனால் அந்த நபர் யார் என்பதை தான் நெட்டிசன்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
இவருடன் அமலாபால் பாண்டிச்சேரியில் ஒன்றாக வசித்து வருவதாக கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.