பொலிவுட் நடிகர்களும், முக்கிய சினிமா பிரபலங்களும் இந்தியாவின் கேளிக்கை தலைநகரமான மும்பையில் இன்று காலையில் ஒன்று கூடியிருந்தனர். புதிதாக திரைக்கு வரவுள்ள ‘Photograph’ என்ற திரைப்படத்தின் விசேட காட்சியை காண்பதற்காகவே அவர்கள் அணிவகுத்து வந்தனர்.
இதில் முக்கியமாக ரேகா, ஷபானா அஷ்மி மற்றும் டயானா பென்டி ஆகியோருடம் மேலும் சில சினிமா பிரபலங்கள் முதல் காட்சி திரையிடலில் கலந்து கொண்டனர்.
‘Photograph’ திரைப்படம் சன்யா மல்ஹோத்ரா மற்றும் நவாஸூதீன் சித்திக் ஆகியோரின் மிகச் சிறந்த நடிப்பில் உருவாகியுள்ளது.
இதனை ரித்திஷ் பத்ரா இயக்கியுள்ளதுடன், ‘Photograph’ திரைப்படத்தின் கதை ஒரு வழிபோக்கு புகைப்படகாரருக்கும் ஒரு கூச்ச சுபாவம் மிக்க பெண்ணும் இடையிலான பிணைப்பை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது. குறித்த திரைப்படம் நாளை 15 ஆம் திகதி திரையிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஒஸ்கார் விருது பெற்ற ஸ்பெயின் திரைப்பட இயக்குனர் பெட்ரோ அல்மோடோவரின் புதிய தயாரிப்பில் உருவாகியுள்ள “Pain and Glory” திரைப்படம் விரைவில் வௌ்ளித் திரை காணவுள்ள நிலையில், நேற்று மெட்ரிட் நகரில் முன்னோட்டம் விடப்பட்டது.
இவரது திரைப்படங்களில் நடித்ததன் ஊடாக ஹொலிவூட்டில் நட்சத்திர அந்தஸ்தை பெற்ற நடிகர்களான Penelope Cruz மற்றும் Antonio Banderas ஆகியோர் புதிய திரைப்படத்தில் மீளிணைந்துள்ளனர்.
எவ்வாறாயினும் குறித்த திரைப்படத்தின் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வௌியீட்டு திகதிகள் இன்னமும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை என்று அல்மோடோவரின் எல் டெசியோ தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.