நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவில் மெல்ல மெல்ல கால் பதித்து வருகிறார். தற்போது, சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் உருவாகிவரும் NGK என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், மும்பையில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட ரகுல் ப்ரீத் சிங்-கிடம் நடிகர் கிருஷ்ணா நடந்து கொண்ட விதம் தான் இப்போதைய வைரல் புகைப்படம்.
மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பணியை செய்து கொண்டிருந்தார் நடிகர் கிருஷ்ணா. அப்போது தன்னுடைய விருதை வாங்க வந்தார் நடிகை ராகுல் ப்ரீத் சிங். இவரை தனக்கு மிக அருகில் பார்த்ததும் தனது தலையால் அவரை முட்டுவது போல சென்றுள்ளார் கிருஷ்ணா. சுதாரித்து கொண்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங் சிரித்தபடியே சற்றே ஒதுங்கி கொண்டார்.