தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் தனக்கு மும்பை விமான நிலையத்தில் நடந்த கொடுமைகளை பற்றி தற்போது தகவல் வெளியிட்டிருக்கிறார்.
அதில், ஒருநாள் காலையில் அந்த விமான நிலைய கவுண்டருக்கு சென்றதும், அங்கிருந்த பெண் ஒருவர் என்னை தேவையில்லாமல் அலைக்கழித்தார். நான் சீக்கிரமாகவே அங்கு சென்றிருந்தாலும் எனக்கு தேவையில்லாத சங்கடங்களை அங்கிருந்தவர்கள் கொடுத்தனர்.
மேலும் விமானத்துக்கு செல்ல வேண்டிய நுழைவாயிலையும் மூடி இருந்தனர். இதனால் நான் ஏகப்பட்ட கஷ்டங்களை அனுபவித்தேன். இதை நான் விமான நிர்வாகத்திடம் கூறிய போது, என்னை தனியாக அழைத்து பேச முயற்சித்தனர். ஆனால் நான் அவர்களுக்கு நேரம் ஒதுக்கவில்லை என கூறினார்.