பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை ஜரீன் கான். இவர் சமீபத்தில் விடுமுறையை கழிக்க கோவாவிற்கு சென்றுள்ளார்.
அஞ்சுனா என்ற பகுதியில் காரில் பயணம் செய்துள்ளார். ஏதோ விஷயத்துக்காக ஒரு இடத்தில் அவரின் கார் நின்றுகொண்டிருந்த போது அந்த வழியாக வேகமாக வந்த பைக் அதன் மீது மோதியது.
வேகமாக மோதியதில் அந்த பைக் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், நடிகை ஜரீன் கானுக்கு இதனால் லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது.
தனது காயத்தை விட ஒருவர் கண் முன்னே உயிரிழந்துவிட்டாரே என்ற வருத்தத்தில் நடிகை உள்ளாராம்.