சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி சென்னையில் தங்கி தமிழக மக்களுக்கு சேவையாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி நடிப்பில் ரெட்டி டைரி என்ற படம் தாயாராகி வருகிறது. அது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார் ஸ்ரீரெட்டி.
அப்போது தெலுங்கு திரையுலகம் நான்கு பேரை சுற்றியே இருக்கிறது அதனால் மிக மோசமாக உள்ளது எனக் கூறினார்.
சினிமாவில் கருத்து சொல்லும் மிகப்பெரிய இயக்குனர்கள் நிஜவாழ்க்கையில் அப்படி இல்லை என்றுக் கூறி மிக மோசமான ஆங்கில வார்த்தையால் அவர்களை திட்டினார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதற்கு செய்தியாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அதற்கு பதிலளித்த ஸ்ரீரெட்டி அவர்கள் என்னை விபச்சாரி என சொல்கிறார்கள் அது மட்டும் சரியா என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு சமாதானமான ஸ்ரீரெட்டி, பொது இடத்தில் பேசிய தவறான வார்த்தைகளை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார்.
மேலும் தெலுங்கானாவிலும், ஆந்திராவிலும் தனக்கு மரியாதை இல்லை என்றும், அவர்கள் யாரும் தனக்கு உதவிக்கு முன்வரவில்லை எனவும் கூறினார்.
அதனால் இனிமேல் சென்னையிலேயே தங்கி மக்களுக்கு சேவையாற்ற போவதாக அவர் தெரிவித்தார்.