பிகில் படத்தில் நடித்து முடித்தபிறது விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கியுள்ள லோகேஷ் இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
தளபதி64 என அழைக்கப்பட்டு வரும் இந்த ப்ராஜெக்டில் ஹீரோயினாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மற்றும் ராஸி கண்ணா ஆகியோர் தேர்வாகியிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் ரஷ்மிகா மட்டும் தான் ஒப்பந்தமாகியுள்ளார். ராஸி கண்ணா இன்னும் முடிவாகவில்லை என படக்குழுவிக்கு நெருக்கமான வட்டாரம் கூறியுள்ளதாம்.
யார் ஹீரோயின் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.