பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக விஜய் ரசிகர்கள் செய்து வரும் காரியம் பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
2019ம் ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு 4 மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டது. ஆனாலும், மக்களிடம் இன்னும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை.
கடைகளில் பிளாஸ்டிக்குக்கு பதிலாக துணிப்பைகளை சிலர் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். சிலர் இன்னும் பிளாஸ்டிக் பைகளையே கொடுத்து வருகின்றனர். அப்படி செய்தால் அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
இந்நிலையில், திருச்சியில் விஜய் ரசிகர்கள் விஜயின் முகம் பொறிக்கப்பட்ட துணிப்பைகளை சொந்த செலவில் தயாரித்து வணிகர்களிடம் கொடுத்து மக்களிடம் கொடுங்கள் எனக் கூறி வருகின்றனர்.
இந்த புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ள ஒருவர் ‘தளபதி ரசிகர்களை நினைத்தால் பெருமையா இருக்கு’ என டிவிட் செய்துள்ளார்.