விஜய் நடித்த புதியகீதை படத்தில் நடித்தவர் அமீஷா பட்டேல். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். முன்னணி மற்றும் இளம் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வந்தவருக்கு திடீரென்று மார்க்கெட் டல்லடித்தது. இதையடுத்து நேரடி மேடை நிகழ்ச்சிகளில் நடனம் ஆட ஒப்புக்கொண்டு வந்தார். அதற்காக லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினார்.
திரையில் தலைகாட்டாவிட்டாலும் இணைய தள இன்ஸ்டகிராம், டுவிட்டர் பக்கங்களில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டும் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்கள் தெரிவித்தும் தன்னை பரபரப்புடன் வைத்துக்கொண்டிருக்கிறார். சில வருடங்களுக்கு முன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆட ஒப்புக்கொண்டு ரூ 11 லட்சம் சம்பளம் பெற்றார்.
ஆனால் சொன்னபடி திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆட வராததால் அவரை ஒப்பந்தம் செய்த சம்பந்தப்பட்ட நிறுவனம் அமீஷா மீது மோசடி வழக்கு தொடுத்தது. அவருடன் மேலும் 4 பேர் இந்த வழக்கில் இணைக்கப்பட்டனர். இதுகுறித்து இருதரப்பிலும் விசாரணை செய்த நீதிமன்றம் வழக்கை மார்ச் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளது.