ஆந்திர சினிமாவில் அசுர வளர்ச்சி அடைந்து வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா. அஜித் மாதிரி எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் டாப்புக்கு வந்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், டாக்ஸிவாலா படங்கள் வசூலை குவித்தன.
இந்த நிலையில் போபர்ஸ் பத்திரிகை ஆசியாவில் 30 வயதுக்குள் சாதித்தவர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் விஜய் தேவரகொண்டா பெயரும் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து விஜய் தேவரகொண்டா தனது டுவிடட்டரில் “என்னுடைய 25 வயதில் வங்கியின் குறைந்தபட்ச வைப்புத்தொகையான ரூ.500 கூட என்னிடம் இல்லை. இப்போது போர்ப்ஸ் பட்டியலில் நானும் இருக்கிறேன்' என்று தெரிவித்தார்.
இந்த டுவீட்டுக்கு பதில் அளித்த இயக்குனர் மோகன்ராஜா, “இந்த டுவீட்டில் இருந்து சுவாரசியமான திரைக்கதை கிடைத்திருக்கிறது. இதற்காகப் பின்னர் காப்பிரைட்ஸ் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துகள்“ என்று தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா, “அதை படமாக்கினால் உங்கள் முதல் சாய்ஸ் நானாக இருக்கும் பட்சத்தில், காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன். மிகப்பெரிய நன்றி அண்ணா” என தெரிவித்துள்ளார்.