விரைவில் வெளிவரவுள்ள கேப்டன் மார்வெல் படத்தின் விளம்பரத்திற்காக தென்னிந்திய சினிமாவின் டாப் ஹீரோயின்கள் பங்கேற்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் சமந்தா, தமன்னா, காஜல், ராகுல் ப்ரீத் ஆகியோர் பங்கேற்றனர்.
ஹாலிவுட் சூப்பர்ஹீரோ கதாபாத்திரங்கள் பற்றி பேசிய அவர்களிடம் தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு தகுந்த சூப்பர்ஹீரோ கதாபாத்திரம் பற்றி கேட்கப்பட்டது.
Ironமேன் கதாபாத்திரம் பற்றி கேட்டதற்கு காஜல் மற்றும் சமந்தா இருவரும் ‘விஜய்’ என தெரிவித்துள்ளனர். ராகுல் ப்ரீத் அந்த கதாபாத்திரத்திற்கு சூர்யா சரியாக இருப்பார் என தெரிவித்துள்ளனர்.
மேலும் தல அஜித் ‘தோர்’ கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.