விஜய் டிவி சானல் பல நிகழ்ச்சிகளை சுவாரசியமாக செய்து வருகிறது. அதில் கலக்கப்போவது யாரு, பிக்பாஸ், சூப்பர் சிங்கர் என சில நிகழ்ச்சிகளுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கின்றது. அதே வேளையில் ராஜா ராணி, மௌன ராகம், சின்ன தம்பி சீரியல்களுக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றார்கள்.
இந்த டிவி சானலில் ரோபோ சங்கர், டிடி, கோபிநாத், என்னமா ராமர், தங்கதுறை என பலரும் பிரபலங்கள் தான். மேலும் வார வாரம் புதுபடங்களை வெளியிட்டு TRP ல் இடம் பிடிக்கும் போட்டியில் இவர்களும் உண்டு.
இந்த வாரம் மணிரத்னம் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வந்த செக்கச்சிவந்த வானம் படத்தை நாளை ஒளிபரப்புகிறார்களாம். விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி என பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே வேளையில் வரும் பொங்கல் பண்டிகைக்கு ஸ்பெஷல் திரைப்படங்களையும் வெளியிடுகிறார்களாம்.
ஜனவரி 15 – காலை – விக்ரம் நடித்த சாமி 2
ஜனவரி 15 – மதியம் – பரியேறும் பெருமாள்
ஜனவரி 15 – மாலை – சக்கப்போடு போடு ராஜா