நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
7ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படத்தில் தற்போது நடிகர் பார்த்திபன் இணைந்துள்ளார்.
விஜய்சேதுபதியுடன் பார்த்திபன் இணைந்து நடித்த ‘நானும் ரௌடிதான்’ திரைப்படம் ஏற்கனவே வெற்றிபெற்றுள்ள நிலையில் தற்போது பார்த்திபன் இந்த படத்தில் இணைந்தது படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் டெல்லிபிரசாத் தீனதயாள் இயக்கத்தில் உருவாகிவம் இத்திரைப்படம் அரசியல் த்ரில் திரைப்படமாகும்.
இவர் ‘சில்லுன்னு ஒரு காதல்’ இயக்குநர் கிருஷ்ணா, பாலாஜி தரணீதரன், பிரேம்குமார் உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
’96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்திற்கு இயக்குநர் பாலாஜி தரணிதரன் வசனங்களை எழுதியுள்ளார்.