நாம் தமிழர் கட்சியின் மகராஷ்டிரா மாநில கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பில் அம்மாநில பொறுப்பாளர் கனகமணிகண்டன் உருவாக்கிய ‘‘இன எழுச்சி முழக்கம்’ பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது:- ஜெயலலிதா, கருணாநிதி போன்றோர் இருக்கும்போதே அரசியலுக்கு வந்தவர் விஜயகாந்த். அவர் தான் உண்மையான ஆண்மகன். ரஜினி, கமல் போன்றோர் ஹீரோக்கள் அல்ல. ஜீரோக்கள். உங்கள் திரை ஆளுமையை நாங்கள் விமர்சிக்கவில்லை. ஆனால் எங்களை ஆள வேண்டும் என்று நினைக்கக்கூடாது.
தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்கிறார்கள். நல்லகண்ணுவைத் தாண்டிய ஒரு தலைவன் இந்தியாவிலேயே உண்டா? சர்கார் படத்துக்கு அரசு தரப்பில் பிரச்சினை கொடுத்தபோது பணிந்து போகாமல் விஜய் உறுதியாக நின்று இருக்கலாம். என் படத்தில் அவர் நடிக்க மாட்டார். ஆனால் நான் பேசுவதை எல்லாம் பேசி நடிப்பார்.
விஜய்க்கு ஆதரவாக பேசிவந்த சீமான் தற்போது அவரை கடுமையாக விமர்சித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் ரசிகர்கள் சீமானை சமூக வலைதளங்களில் தாக்கி வருகிறார்கள். அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியினரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.