அட்லீ இயக்கும் பிகில் படத்தின் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகின. நீண்ட நாள் எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்ததற்கு போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி விட்டனர்.
படக்குழு விட்ட அடுத்த அப்டேட் விஜய் பாடுகிறார் என்பது தான். இதனை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பிகில் பட ஒரு போஸ்டரில் விஜய் கொடுத்த போஸ் அவரது பழைய படம் ஒன்றில் அப்படியே இருக்கும், அது எந்த படம் என கேள்வி கேட்டுள்ளனர்.
அதற்கு ரசிகர்கள் பலரும் சரியான பதில் கொடுக்க அவர்களும் விஜய்யின் திருமலை படத்திலும் இதே போஸ் என இரண்டு போஸ்டர்களையும் போட்டுள்ளனர்.
How can our #thalapathyfans go wrong? ?
As most of you guessed, the super hit film in which #Thalapathy featured the same pose is ‘#Thirumalai’!#Bigil @archanakalpathi pic.twitter.com/o3qPe2WA24— AGS Entertainment (@Ags_production) July 13, 2019