விஜய்-அட்லீ இருவரும் இணைந்தால் அது வெற்றி படம் தான் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. அதற்கு ஏற்றார் போல் தெறி, மெர்சல் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்துவிட்டனர்.
அடுத்து பிகில் இந்த படம் முழுக்க முழுக்க விளையாட்டை மையப்படுத்திய படம், இதில் விஜய்யை தாண்டி 11 பெண்கள் முக்கிய நடிகர்களாக உள்ளனர். படம் தீபாவளி ரிலீஸ், இதற்கு நடுவில் பட வியாபாரமும் சூடு பிடிக்க நடக்கிறது.
தற்போது ரோஹினி சினிமாஸ் உரிமையாளர் ரேவந்த் பிகில் பட பிசினஸ் குறித்து டுவிட் போட்டுள்ளார். அதில், படக்குழு தரப்பில் இருந்து பிகில் பட வியாபாரம் பற்றி கேள்விப்பட்டேன், மாஸாக நடக்கிறது. இது எல்லாமே விஜய் என்ற ஒற்றை மனிதரின் பெயராலேயே நடக்கிறது என கமெண்ட் போட ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Just came to know from sources about the pre business #Bigil has fetched.
Humongous !
The wow factor is All this buzz is created just by ONE name – Thalapathy @actorvijay !
You are a winner— Rhevanth Charan (@rhevanth95) July 29, 2019