தமிழ் சினிமாவில் தற்போது பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் மன்னன் விஜய் என சொல்லப்பட்டு வருகிறார். அதே வேளையில் அவரின் படங்கள் ரஜினியின் படங்களின் வசூலை ஓரம் கட்டுவதாகவும், விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை உண்டு செய்வதாகவும் விமர்சனங்கள் இருந்து வருகிறது.
அந்த வகையில் தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியான பைரவா வியாபார போட்டி நேரத்திலும் தமிழக ரிலீஸ் உரிமை ரூ 55 கோடிக்கு ஸ்ரீ கிரீன்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. ஆனால் ரூ 41 கோடி மட்டுமே வசூல் செய்தததால் நிறுவனத்திற்கு ரூ 14 கோடி நஷ்டம் என்பதே நிதர்சனம். இந்த ஈடுசெய்தால் தான் பாகுபலி படத்தை வெளியிடமுடியும் என்ற இக்கட்டான நிலைக்கு அந்நிறுவனம் தள்ளப்பட்டது.
பின்னர் வந்த மெர்சல் ரூ 250 வசூல் செய்ததாக விளம்பரம் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டு வந்த நேரத்திலும் தயாரிப்பாளரான தேனாண்டாள் நிறுவனத்திற்கு நஷ்டம் என்ற சர்ச்சையும் இருந்தது. மேலும் இப்போது வரை அந்நிறுவத்தால் படம் ரிலீஸ் செய்யமுடியாத சூழ்நிலையும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
கடந்த வருடம் வந்த அவரின் சர்க்கார் படம் ரூ 140 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ 170 கோடிக்கு விற்கப்பட்டது. தமிழக ரிலீஸ் ரூ 75 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ 200 கோடிகளை தாண்டி வசூல் செய்தது. தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு லாபத்தையும் கொடுத்தது. ஆனால் விநியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த லாபம் இல்லை. மேலும் ரூ 80 கோடிகளுக்கும் குறைவாகவே ஷேர் கொடுத்துள்ளது.
இப்படி அதிக விலைக்கு படங்கள் விற்கப்படுவதால் கூடுதலான விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதாக தியேட்டர்கள் மீது புகார்களும் இருக்கிறது. இதனால் சர்கார் படம் பெருமளவில் நஷ்டத்தை ஏற்படுத்தாதற்கு இதுவும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.
இபடியான தொடர் காரணங்களால் தான் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன் சொந்த தயாரிப்பில் குறுகிய காலத்தில் மினிமம் பட்ஜெட்டில் எடுக்க முடிவு செய்தார் எனவும் சொல்லப்படுகிறது.
இவ்வருடம் வெளியாக இருக்கும் பிகில் ரிலீஸ்க்கு முன்பே ரூ 200 கோடிகளை பெற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது