இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்து சீமராஜா படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த படம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.
இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா பிரமாண்டமாக அண்மையில் இடம்பெற்றது.
போலாந்து நாட்டில் சீமராஜா படத்தை வெளியிட தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் கசிந்துள்ளது.
இதுவரை ரஜினி மற்றும் அஜித் நடித்த திரைப்படம் மட்டும்தான் போலாந்து நாட்டில் வெளியாகியுள்ளது.
விஜய் நடித்த படங்கள் கூட இதுவரை போலாந்து நாட்டில் வெளியாகியதில் எனினும், சிவகார்த்திகேயனுக்கு இந்த அதிஷ்டம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.