விஜய்க்கான பலம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அமைதியாக இருந்தாலும் அவரது ரசிகர்கள் அவருக்கு எந்த ஒரு சிக்கல் என்றாலும் ஆர்ப்பரித்து விடுகிறார்கள்.
சில விழாக்களில் அவர் மேடையில் பேசுவது மிகவும் ரசிக்கத்தக்கதாக அமைந்து விடுகிறது. அவருக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள்.
அவரை பாராட்டி புகழத்தான் செய்கிறார்கள். இந்நிலையில் KGF படத்தின் நடிகர் யாஷ் ஒரு நேர்காணலில் கலந்துகொண்டுள்ளார். அதில் அவர் டான்ஸ் என்றால் அது விஜய் சார் தான். அவரை போல மற்றவர்கள் ஆடமுடியாது.
இந்த வயதிலும் பயிற்சி எடுத்து நவீன காலத்திற்கு கேற்றபடி சிறப்பாக ஆடுகிறார் என கூறியுள்ளார்.