அஜித், விஜய் இவர்கள் இரண்டு பேருமே இப்படி தான் என யோகி பாபு வெளிப்படையாக கூறியுள்ளார். அந்த தகவல் சமூக வளையதளங்களில் படுவைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் இன்றைய காமெடி நடிகர்களின் முன்னணி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தமிழ் சினிமாவின் அதனை முன்னணி நடிகர்களுடன் கூட்டணி போட்டு நடித்து விட்டார்.
தளபதி விஜயுடன் மெர்சல், சர்கார் படங்களில் நடித்திருந்தார். அடுத்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தல அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் நடித்துள்ளார்.
இவர்கள் இருவரை பற்றி யோகி பாபுவிடம் ஒரு பேட்டியில் கேட்டதற்கு விஜய் சார், அஜித் சார் இருவருமே எனக்கு ஒன்னு தான்.
இவர்களை பிரித்து பார்க்க முடியாது என கூறியுள்ளார். மேலும் விஜயை கலாய்த்தால் அவரை அது சாதாரணமாக ஏற்று கொண்டு சிரிப்பார்.
அஜித்துடன் நடிக்கும் போது சார் கலாய்க்கட்டுமா என தயக்கத்துடன் கேட்டதற்கு அதானே உங்க வேலை அதுக்கு தானே சம்பளம் அப்புறம் என்ன தயக்கம் என சாதாரணமாக பதிலளித்தார் என கூறியுள்ளார்.