64ஆவது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த விருதை அவரது மகள் பெற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மும்பையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்திருந்தனர்.
இதன்போது சிறந்த நடிகருக்கான விருதை சஞ்சு திரைப்படத்திற்காக ரன்பீர் கபூர் பெற்றுக்கொண்ட அதேவேளை, சிறந்த நடிகைக்கான விருதை ராஷி திரைப்படத்திற்காக ஆலியாபட் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை சினிமாவில் 50 ஆண்டு காலம் சேவையாற்றியதற்காக நடிகை ஹேமமாலினிக்கு விருது வழங்கப்பட்டதுடன், ‘பத்மாவதி’ படத்தில் நடித்த ரன்வீர்சிங்குக்கு சிறந்த விமர்சிக்கப்பட்ட நடிகர் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.