மும்பையை சேர்ந்த நடிகை பூனம் பாஜ்வா, தமிழில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக ‘சேவல்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து, ஜீவாவுடன் ‘தெனாவட்டு’ , ‘கச்சேரி ஆரம்பம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இந்நிலையில் இவருக்கு தற்போது பட வாய்புகள் எதுவும் இல்லை.
நீண்ட இடைவெளிக்குப்பின், ‘மாஸ்டர் பீஸ்’ என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் பூனம் பாஜ்வா கல்லூரி விரிவுரையாளராக நடித்தார்.
அதில் கதாநாயகனாக மம்முட்டி நடித்திருந்தார். மேலும் நடிகை வரலட்சுமி சரத்குமார் காவல் துறை அதிகாரியாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் இந்த படத்திற்கு தமிழில், ‘பேராசிரியர் சாணக்யன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதுவரை குடும்பபாங்காகவும், சிறிதளவு கவர்ச்சி மட்டுமே காட்டி வந்த பூனம் பாஜ்வா, இனி படுகவர்ச்சியாக நடிக்க முடிவு செய்துள்ளாராம். அதோடு கவர்ச்சி பாடல்களுக்கு நடனம் ஆடவும் ஓகே சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது.