இளம் நடிகை ஒருவர் கடலை போட்டு, கமிஷன் கொடுத்து அடுத்த நடிகைகளுக்கு செல்லும் பட வாய்ப்புகளை தட்டிப் பறிக்கிறாராம்.
செவத்த தோல் கொண்ட இளம் நடிகை ஒருவர் வெடுக் வெடுக் என்று இடுப்பை ஆட்டி டான்ஸ் ஆடினால் அதை பார்த்து அசராதவர்களே இல்லை. நடனத்தை வைத்தே தமிழ் திரையுலகில் பிரபலமாகிவிட்டடார்.
அவர் நடனத்தை பார்த்து அசந்து போன ஹீரோக்கள் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்குமாறு இயக்குனர்களுக்கு பரிந்துரை செய்கிறார்கள்.
நடிகை நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஹிட்டாகியுள்ளது. சில நடிகைகளுக்கு செல்லவிருந்த பட வாய்ப்புகளை அம்மணி தட்டிப் பறித்துள்ளார். அடுத்தவர்கள் வாய்ப்பை தட்டிப் பறித்துவிட்டு ஒன்றுமே தெரியாத குழந்தை போன்று முகத்தை வைத்துள்ளார்.
வாய்ப்புகளை எப்படி பெறுவது என்ற ரகசியத்தை தெரிந்து வைத்திருக்கிறார் அம்மணி. பெரிய ஹீரோக்களுக்கு அடிக்கடி போன் செய்து பேசுகிறாராம். எல்லாம் நட்பை வளர்த்து வாய்ப்பு பெறத் தான். இப்படி நட்பை வளர்த்து வாய்ப்பு பெற்று உச்சத்திற்கு வந்த பிரபல நடிகை ஒருவர் தற்போது மார்க்கெட் இல்லாமல் திண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனக்கு வாய்ப்பு வாங்கித் தரும் தயாரிப்பு நிர்வாகிகள், உதவி இயக்குனர்களுக்கு கமிஷன் கொடுத்து ஐஸ் வைக்கிறாராம் அம்மணி. ஏற்கனவே நடிகையின் நடனத்தை பார்த்து கடுப்பில் இருக்கும் சக நடிகைகள் தற்போது அவர் ரகசியமாக செய்து வரும் வேலைகள் குறித்து அறிந்து கோபம் அடைந்துள்ளார்களாம்.
நடிகையை ஒப்பந்தம் செய்பவர்கள் அவரை ஹோம்லியாக படத்தில் காட்டுவது அம்மணிக்கு பிடிக்கவில்லையாம். குட்டி குட்டி உடை அணிந்து மாடர்னாக நடிக்க விரும்புகிறாராம். இதனால் தன் கவர்ச்சிப் புகைப்படங்களை இயக்குனர்களுக்கு அனுப்பி வைத்து இது போன்று படத்தில் நடிக்க வைக்குமாறு தூதுவிடுகிறாராம்.