இன்று சனிக்கிழமை என்பதால் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் இந்த வாரமாவது வனிதாவை கண்டிப்பாரா என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் இருக்கிறது.
வனிதா நேற்று தர்ஷன் பேசியபோது கோபமாகி மைக்கை தூக்கி எரிந்துவிட்டார். மேலும் வேறு யாருமே பேசக்கூடாது என்கிற தொனியில் வனிதா சண்டை போட்டார். அது பெரிய வாக்குவாதம் ஆகி பின்னர் சமாதானம் ஆனது.
இந்நிலையில் கமல்ஹாசன் வனிதாவுக்கு அட்வைஸ் செய்துள்ளது தற்போது வந்துள்ள டீசரில் காட்டப்பட்டுள்ளது. வனிதா அபிராமியை குற்றம் சாட்டி பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட கமல் ‘ஒருவர் பேசும் அளவுக்கு, மற்றவர்கள் பேசுவதையும் கேட்க வேண்டும்’ என கூறி நோஸ்கட் கொடுத்துள்ளார்.
தான் பேசுற அளவுக்கு கேக்கவும் வேணும்! #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/q30vlZploa
— Vijay Television (@vijaytelevision) July 13, 2019