பாக்ஸ் ஆஃபிஸில் பிரபல நடிகர்களின் படங்கள் ரூ 100 கோடி வசூலை தாண்டுவது சாதாரணமான விசயம். அதிலும் அடுத்தடுத்து கோடிகள் கிளப்பில் ஹீரோக்கள் இணைந்துவிடுவார்கள்.
பாலிவுட் சினிமாவின் முக்கிய ஹீரோவான ரன்வீர் சிங் நடிப்பில் சிம்பா கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. புது வருடம் தொடங்கியும் படம் இன்னும் பல இடங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
கடந்த டிசம்பர் 28 ல் வெளியான் இபபடம் இந்தியாவில் மட்டும் 290 கோடிகளை வசூலித்தது. தெலுங்கில் வந்த டெம்பர் படத்தின் ரீமேக்கான சிம்பா தற்போது உலகம் முழுக்க ரூ 386 கோடிகளை நெருங்கிவிட்டதாம்.
விரைவில் ரூ 400 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த வருடம் வெளியாகி அதிக வசூலை பெற்ற படங்களில் சிம்பா மூன்றாவது இடத்தில் உள்ளது.
சஞ்சு – ரூ 580 கோடி
பத்மாவத் – ரூ 540 கோடி
சிம்பா – ரூ 400 கோடி