பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் அடுத்து உருவாகவுள்ள திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனிருத்தின் அதிரடி இசையில் SK17 திரைப்படம் விரைவில் உருவாகவுள்ளது.
இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ளது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகி 2020ஆம் ஆண்டு படம் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட தயாரிப்புகளை வழங்கிவரும் லைக்கா புரடக்ஷன்ஸின் வெற்றிப்பட வரிசையில் இத்திரைப்படமும் இணைந்துகொள்ளுமென ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.