பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷனின் தயாரிபில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள படம் காப்பான்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து சிறுக்கி என்றொரு பாடல் ஏற்கனவே வெளியான நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெற உள்ளதாக திரு. அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா புரொடக்ஷன் அறிவித்துள்ளது.
இந்த படத்தில் பிரதமராக மோகன்லால் நடித்துள்ளார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார்.
சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இராணி, சிரக் ஜெனி என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.