லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள ஐரா திரைப்படம் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியாகவுள்ளது . இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்த முக்கிய தகவலை படத்தின் இயக்குனர் சர்ஜின் தெரிவித்துள்ளார்.
நயன்தாராவின் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் அவர், ஊடகவியலாளர் வேடத்திலும், சாதாரண அப்பாவிப் பெண்ணாகவும் நடித்து அசத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக நயன்தாராவின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படங்கள் அனைத்திலும் அவர், தனித்துவம் மிக்க கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதை காணக்கூடியதாக உள்ளது.
குறிப்பாக அறம், விஸ்வாசம், இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் மாறுபட்ட இருவேடங்களில் நடித்துள்ள ஐரா திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.